இளையதலைமுறை

நாங்கள் இளையதலைமுறை சமூக விழிப்புணர்வு அமைப்பு |

Member Duties

உறுப்பினர்களின் கடமைகள்

இளையதலைமுறை உறுப்பினர்களின் செயல்பாடுகள் பின்வருமாறு இருத்தல் அவசியம்.

நமக்க இரண்டு வகையான உறுப்பினர்கள் சேரலாம்.

முதல் வகை உறுப்பினர்கள் – செயல்வீரர்கள்.
இரண்டாம் வகை – உறுப்பினர்கள்.
(a)இவர்கள் அவரவர் பகுதியில் உள்ள மக்களின் பிரதிநிதியாக இருப்பர்.

(b)புகை, மது போன்ற பழக்கங்கள் இருக்க கூடாது.

(c)மக்களுக்கு தொண்டு செய்யம் நோக்கம் தவிர வேறு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்க கூடாது. உதாரணம்: பணம் சம்பாரிப்பது, பதவியாசை, சொந்த விருப்பு வெறுப்புகள் போன்ற பல.

(d)அலுவலகம் மற்றும் தேவையான இடங்களில் மட்டும் ஆங்கிலம் பயன்படுத்தலாம். மற்ற சமயங்களில் தாய் மொழியான தமிழ் மொழியை தான் பயன்படுத்த வேண்டும்.

(e)எந்த ஒரு தனிப்பட்ட மதம், அரசியல் தலைவர், நடிகர், விளையாட்டு வீரர் அல்லது சமூகம் போன்றவற்றை பற்றி இங்கு விவாதிக்க கூடாது.

(f)தவறு செய்ய வாய்ப்பு கிடைக்கும் போதும் தவறு செய்யாமல் இருக்கும்படியான சுய ஒழுக்கம்

(g)மக்களை சென்றடைய கீழ் உள்ள ஏதேனும் ஒரு வழியை கையாள தெரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் வேலைக்கு செல்பவர்கள் அல்லது கல்லூரி செல்பவர்கள் என்பதால் வார இறுதி நாட்களில் உங்களால் ஆன பங்களிப்பை அளிக்கலாம்.

i.களப்பணிகள் மூலமாக (உதாரணம்: மரம் நடுதல், அசுத்தமான சுவர்களில் ஓவியம் வரைதல், சாலை போக்குவரத்து விழிப்புணர்வு, போன்ற பல)

ii.விழிப்புணர்வு குறும்படம் அல்லது ஓவியம் வரைதல்

iii.விழிப்புணர்வு கட்டுரை அல்லது ஒலிப்பதிவு உருவாக்கம்

iv.மக்களுக்கு சமூகம், அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டம் போன்றவைகள் சார்ந்த விழிப்புணர்வு

a.ஏற்கனவே கூறியது போல, மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படும் அமைப்பு. இருந்தாலும் இப்போது இருக்கும் பல அரசியல் சார்ந்த அல்லது அரசியல் சாராத அமைப்புகளை விட்டு வேறுபடுத்தி காட்ட உறுப்பினர்கள் அடையாளம் தேவைபடுகிறது.

b.மாற்றத்தை எதிர்பார்த்து நமது நோக்கங்களையும், கொள்கைகளையும் ஆதரிப்பவர்கள் அனைவரும் உறுப்பினர்களே.

c.முதல் வகையில் உள்ளவர்களை போன்ற எந்த சமூக பணியையும் என்னால் செய்ய இயலாது; ஆனால் நமது கொள்கைகளை பற்றியும், நோக்கங்களை பற்றியும் எனக்கு தெரிந்த உறவினர் மற்றும் நட்பு வட்டங்களில் குறைந்தது 100 பேரிடம் கொண்டு செல்ல முடியும் என்பவர்கள் இந்த வகையில் இருக்கலாம்.