நாம் தினமும் பல விபத்துக்களை செய்தியாக படிக்கிறோம். ஆனால் விபத்திற்கு பின்னர் அந்த குடும்பம் என்ன ஆனது என சிந்திப்பவர்கள் குறைவு.
அதுபோன்று 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது வேளச்சேரியில், மின் கம்பி அறுந்து விழுந்ததால், இரு மகள்களை காப்பாற்றி விட்டு சம்பவ இடத்திலேயே அவர்களது பெற்றோர்கள் உயிரிழந்தனர். தற்போது அவரது சித்தப்பா வீட்டில் வளர்ந்து வரும் குழந்தைகளை நேரில் சந்தித்தோம்.
திருச்சியை சார்ந்த அவர்கள் பிழைப்பிற்காக சென்னைக்கு வந்துள்ளனர். சித்தப்பா ஒரு 2 வீலர் மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர்கள் குடும்பம் நடத்துவதும் மிக சிரமமாக தான் உள்ளது. அவர்களின் மகனோடு, தனது இரு அண்ணன் மகள்களையும் வளர்த்து வருகிறார்.
வேளச்சேரி பேபி நகரில் உள்ள அந்தோனி(St. Antony) தனியார் பள்ளி 12 வகுப்பு வரை கட்டணமின்றி அப்பள்ளியில் படிக்கலாம் என கூறியுள்ளனர். அரசாங்கம் மூலம் கிடைத்த நிவாரண நிதியுதவி fixed deposit இல் மகள்களின் பெயரில் உள்ளது.
நாம் நேரில் சந்தித்த பிறகு இவ்வாறு உதவிகளை செய்யலாம் என முடிவு செய்தோம்.
அந்த இரு குழந்தைகளுக்கு உதவ இளையதலைமுறை வங்கி கணக்கில் ஒருவர் ரூ. 3000 அனுப்பினார். அந்த குழந்தைகள் சந்தோஷமாக தீபாவளியை கொண்டாட புத்தம் புதிய ஆடைகள் மற்றும் விளையாட்டு பொம்மைகள் வாங்கி கொடுத்து உள்ளோம். அடுத்த வாரம், ஒரு ஸ்வீட் பாக்ஸ் மற்றும் பட்டாசு பெட்டி வாங்கி கொடுக்க உள்ளோம்.
இந்த குடும்பத்திற்கு மெக்கானிக் கடை வைத்து கொடுக்க இளையதலைமுறை மூலம் ஏற்கனவே நமது நண்பர்கள் அளித்த பணம் நம்மிடம் இருப்பு உள்ளது. இவருக்கு மெக்கானிக் கடை இன்னும் செட் ஆகவில்லை. இன்னும் சில வாரங்களில் கடை வாடகைக்கு கிடைக்கும் என கூறி உள்ளார்.
சென்ற வருடம் தீபாவளியை கொண்டாட குழந்தைகளுக்கு ரூ. 3000 மதிப்புள்ள துணிமணியும், இனிப்பும் வாங்கி கொடுத்தோம். இந்த வருடம், நண்பர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி செய்தால், சென்ற வருடம் போலவே இந்த வருடமும் துணிமணியும், இனிப்பும் வாங்கி தரலாம் என்று கோரிக்கை வைத்தோம்.
வேளச்சேரி மின்சார விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தீபாவளியை கொண்டாட 2500 மதிப்புள்ள புதிய துணிமணி எடுத்து கொடுத்தோம். அவர்களின் புகைப்படத்தையும் இணைத்துள்ளோம்.
நிதியுதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்…
Ramu S, Sivagangai | Rs. 500 |
Andrew Rees, Kanniyakumari | Rs. 5000 |
Namban Siva, Kancheepuram | Rs. 2000 |
Saravanan Manickam | Rs. 1000 |
மீதமுள்ள தொகை மெக்கானிக் கடை வைக்க உபயோகபடுத்தப்படும்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், பாளையங்கோட்டை எனும் ஊரில் வசித்து வருபவர்தான் இந்த மாற்றுத்திறனாளி (சுந்தரமூர்த்தி, 45)
இவர் ஶ்ரீ ராம் இஞ்சினியரிங் ஒர்க்ஸ் என்ற வெல்டிங்,லேத் சார்ந்த சுய தொழில் செய்து நிம்மதியாக வசித்து வந்தவர்தான். இவருக்கு காலில் சிறு வயதில் குற்றிய ஆணி அப்படியே செப்டிக் ஆகி அதற்கு லட்சகணக்கில் மருத்துவ செலவு செய்து வந்துள்ளார்.
ஆனால் கடந்த 2013 ஆம் ஆண்டு அவருக்கு பூஞ்சை காளான் என்ற வைரஸ் வேகமாக கால் முழுவதும் பரவி ஒரு காளை முழுவதுமாக ஆபரேஷன் செய்து துண்டித்துவிட்டனர்.
மூன்று மாதம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர் இன்றுவரை மிகச்சிரமப்பட்டு வாழ்வை நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள். அன்றாட குடும்ப தேவைகளையே பூர்த்தி செய்யமுடியாது தவிக்கிறார். முன்பு வாடகை இடத்தில் இருந்த ஒர்க்ஷாப்பையும் காலி செய்ய சொல்லிவிட்டனர்.
கையில் இருந்தது மனைவி நகை என அனைத்தையும் விற்று ஒரு இடம் வாங்கியுள்ளார் அந்த இடத்தில் ஒர்க்ஷாப்பை நிறுவ முயற்ச்சிசெய்து வேலை பாதியிலேயே நிற்கிறது.
மீதம் உள்ள வேலையை முடித்து தொழிலை தொடங்க ₹50,000 தேவைப்படுகிறது பேங்க்ல லோன் கேட்டா ஒர்க்ஷாப் ஆரம்பியுங்கள் ஒரு வருடம் கழித்து லோன் தருகிறோம் எனக் கூறுகின்றனர்.
இப்போது அவருக்கு சொந்தங்கள் கூட உதவ தயாராக இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார் இதில் அன்றாட குடும்ப செலவுக்கே அவர் மனைவி கூலி விவசாய வேலைக்கு சென்றுதான் குடும்ப செலவை சமாளிக்கின்றார்கள்.
இவருக்கு நல்ல உள்ளம் கொண்டவர்கள் உதவி செய்தால் அவர் தொழில் தொடங்கி அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுவார்.
உதவி புரியுங்கள் தோழர்களே… கடலூர் இளையதலைமுறை நிர்வாகி மூலம் நேரில் பார்த்து உறுதி செய்யப்பட்டது.
நண்பர்களிடம் நாம் வைத்த மேற்கண்ட கோரிக்கைக்கு நல்ல பலன் கிடைத்தது.
ஏழை மாற்று திறனாளிக்கு உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்நத நன்றிகள். இன்று கடலூர் நிர்வாகி ராஜா மணிவண்ணன் அவர்கள் நேரில் சந்தித்து உதவியை வழங்கினார்.
Date | Name | Rupees |
---|---|---|
19.06.2017 | Chakravarthy, Kanchipuram | 500 |
19.06.2017 | Palani E, Kanchipuram | 500 |
20.06.2017 | Neminathan, Chennai | 300 |
20.06.2017 | A. Mohammed Asraf Ali, Theni | 500 |
21.06.2017 | G.N.K. Suresh Babu, Bangalore | 1000 |
30.06.2017 | Maruthi Ramanan, Salem | 300 |
30.06.2017 | Gowtham R, Erode | 500 |
03.07.2017 | Kathirvel | 1000 |
03.07.2017 | Saravanan Manickam | 2000 |
05.07.2017 | Rajagopal Thirupathi, Namakkal | 500 |
29.07.2017 | Karthick Surendran | 200 |
31.07.2017 | Balamurugan S, Chennai | 1000 |
01.08.2017 | Kamalakannan, Perambalur | 3500 |
01.08.2017 | Saravanan Manickam | 2000 |
01.08.2017 | Sridhar Thirumullaivoyal | 500 |
01.08.2017 | Rajesh Sukendiramani | 200 |
01.08.2017 | Rajesh Suyambu, Tirunelveli | 500 |
Total | 15,000 |