2014ம் ஆண்டு, நவம்பர் 22 அன்று இளையதலைமுறை என்ற அமைப்பு, ஒரு முகநூல் பக்கமாக (Facebook Page) தமிழக இளையசமுதாயத்தை ஒருங்கிணைப்பதை முதல் நோக்கமாகவும் “நாளைய இந்தியா இளைஞர்கள் கையில்” என்ற அய்யா அப்துல் கலாம் அவர்களின் கனவை நனவாக்குவதை இலட்சியமாகவும் கொண்டு தனது பயணத்தைத் துவங்கியது.
மரம் நடுதல், நீர்நிலைகளைத் தூர்வாருதல், பள்ளி, பூங்கா உள்ளிட்ட பொது இடங்களை சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் விழிப்புணர்வு உள்ளிட்ட சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளிலும் அறவழிப் போராட்டங்கள், பேரணிகள், பொதுப் பிரச்சனைகளுக்கு கோரிக்கை மனு/ஆர்.டி.ஐ மனுக்களின் மூலம் தீர்வு காணுதல், கிராமசபைகளில் கலந்துகொண்டு மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதித்தல் போன்ற அரசியல் செயல்பாடுகளிலும் இளையதலைமுறை நண்பர்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றனர். இது தவிர பிற தோழமை அமைப்புகள் முன்னெடுக்கும் போராட்டம் மற்றும் நிகழ்வுகளிலும் அமைப்பு பாரபட்சமின்றி கலந்துநோண்டு தமிழகமெங்குமுள்ள இளையதலைமுறை நண்பர்கள் சமூகத்திற்கான தமது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். ( மேலும் அறிய ஊடக செய்திகள் பக்கம் பார்க்க)