உறுப்பினர்

உறுப்பினர்களின் கடமைகள்

நாங்கள்

இளையதலைமுறை

உறுப்பினர்களின் கடமைகள்

இளையதலைமுறை உறுப்பினர்களின் செயல்பாடுகள் பின்வருமாறு இருத்தல் அவசியம்.

1. நமது அமைப்பு மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அமைப்பாக இருக்க வேண்டும்.

2. அறவழியில் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, நமது நோக்கங்களை எடுத்துக் கூற வேண்டும்.

3. எந்தவொரு தனிப்பட்ட அரசியல் தலைவரையோ மற்றும் கட்சியையோ குறை கூறி வழி நடத்தி செல்லுதல் கூடாது.

4. ஆண்களுக்கு நிகராக பெண்களும் அதிக அளவில் இடம் பெற வேண்டும். அதற்கான பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும்.

5. மனித ஜாதி என்பதை மறந்து, அக்காலத்தில் அவரவர் செய்த வேலையை வைத்து மனிதனால் உருவாக்க பட்ட ஜாதியை முற்றாக ஒழிப்பது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொருவரும் வேண்டுமென்றால் ஜாதியை அவரவர் வீட்டோடு வைத்து கொள்ளட்டும். சாதியைப் பயன்படுத்தி வெளியே சிபாரிசு செய்வது அல்லது தவறான வழியில் உபயோகபடுத்துவது போன்றவற்றை தடுக்க, எவரும் எவரிடமும் நீர் எந்த ஜாதி என்ற அபத்தமான கேள்விகளை நமது அமைப்பில் தவிர்க்க வேண்டும்.

6. அணு சம்பந்தமான தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்திற்க்கு தேவையான நீர்வளம், மின்சாரம் போன்றவை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தருவது போன்றவற்றிற்கு காரணமான அரசியல்வாதிகளை மாற்றுவோம். ஒருங்கிணைந்த இந்தியாவாக இருக்கும் போதே நதிநீர் பிரச்சனைகள் உள்ளன. ஆகவே தனித்தமிழ்நாடு என்ற நிலைபாடு நம் கொள்கைகளில் இல்லை.

7. அனைவருக்கும் தாய்மொழி பற்று அவசியம். அதற்காக மற்ற மொழிகள் கற்பது தவறல்ல. விருப்பமுள்ளவர்கள் இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தையும், மூன்றாவதாக ஹிந்தியையும் கற்கலாம்.

8. பொது மக்களுக்கு இடையூறாக போராட்டம், கடைஅடைப்பு, சாலையை மறித்து பொது கூட்டம் போன்றவற்றை ஆதரிக்க படமாட்டாது. அதற்கு பதில் விழிப்புணர்வு பேரணி, இடையூறு இல்லாமல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யலாம்.

9. நமக்க இரண்டு வகையான உறுப்பினர்கள் சேரலாம்.

10. முதல் வகை உறுப்பினர்கள் – செயல்வீரர்கள்.

(a)இவர்கள் அவரவர் பகுதியில் உள்ள மக்களின் பிரதிநிதியாக இருப்பர்.

(b)புகை, மது போன்ற பழக்கங்கள் இருக்க கூடாது.

(c)மக்களுக்கு தொண்டு செய்யம் நோக்கம் தவிர வேறு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்க கூடாது. உதாரணம்: பணம் சம்பாரிப்பது, பதவியாசை, சொந்த விருப்பு வெறுப்புகள் போன்ற பல.

(d)அலுவலகம் மற்றும் தேவையான இடங்களில் மட்டும் ஆங்கிலம் பயன்படுத்தலாம். மற்ற சமயங்களில் தாய் மொழியான தமிழ் மொழியை தான் பயன்படுத்த வேண்டும்.

(e)எந்த ஒரு தனிப்பட்ட மதம், அரசியல் தலைவர், நடிகர், விளையாட்டு வீரர் அல்லது சமூகம் போன்றவற்றை பற்றி இங்கு விவாதிக்க கூடாது.

(f)தவறு செய்ய வாய்ப்பு கிடைக்கும் போதும் தவறு செய்யாமல் இருக்கும்படியான சுய ஒழுக்கம்

(g)மக்களை சென்றடைய கீழ் உள்ள ஏதேனும் ஒரு வழியை கையாள தெரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் வேலைக்கு செல்பவர்கள் அல்லது கல்லூரி செல்பவர்கள் என்பதால் வார இறுதி நாட்களில் உங்களால் ஆன பங்களிப்பை அளிக்கலாம்.

i.களப்பணிகள் மூலமாக (உதாரணம்: மரம் நடுதல், அசுத்தமான சுவர்களில் ஓவியம் வரைதல், சாலை போக்குவரத்து விழிப்புணர்வு, போன்ற பல)

ii.விழிப்புணர்வு குறும்படம் அல்லது ஓவியம் வரைதல்

iii.விழிப்புணர்வு கட்டுரை அல்லது ஒலிப்பதிவு உருவாக்கம்

iv.மக்களுக்கு சமூகம், அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டம் போன்றவைகள் சார்ந்த விழிப்புணர்வு

11. இரண்டாம் வகை – உறுப்பினர்கள்.

a.ஏற்கனவே கூறியது போல, மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படும் அமைப்பு. இருந்தாலும் இப்போது இருக்கும் பல அரசியல் சார்ந்த அல்லது அரசியல் சாராத அமைப்புகளை விட்டு வேறுபடுத்தி காட்ட உறுப்பினர்கள் அடையாளம் தேவைபடுகிறது.

b.மாற்றத்தை எதிர்பார்த்து நமது நோக்கங்களையும், கொள்கைகளையும் ஆதரிப்பவர்கள் அனைவரும் உறுப்பினர்களே.

c.முதல் வகையில் உள்ளவர்களை போன்ற எந்த சமூக பணியையும் என்னால் செய்ய இயலாது; ஆனால் நமது கொள்கைகளை பற்றியும், நோக்கங்களை பற்றியும் எனக்கு தெரிந்த உறவினர் மற்றும் நட்பு வட்டங்களில் குறைந்தது 100 பேரிடம் கொண்டு செல்ல முடியும் என்பவர்கள் இந்த வகையில் இருக்கலாம்.

12. தமிழத்தில் உள்ள வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், மேயர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் என 1.25 லட்சம் அரசியல் சார்ந்த பதவிகளை வகிக்க முதல் வகை உறுப்பினர்களே தேர்வு பெறுவர். அது மட்டுமல்லாமல் அரசியல் அறிவு, திடம், அற்பணிப்பு, நேர்மை, எளிமை, விவேகம், பொறுமை காத்தல், விடாமுயற்சி மற்றும் ஆளுமை திறன் என பல திறமைகள் மற்றும் நேர்முக தேர்வு வைத்து தேர்ந்தெடுக்க படுவர்.