செய்பவை

விவசாயம்

நாங்கள்

இளையதலைமுறை

விவசாயம்

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ. 2.3 லட்சம் நிதியுதவி

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நம்மாலான நிதியுதவி செய்யலாம் என முடிவு செய்து நண்பர்களிடம் உதவி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. நமக்கு கிடைத்த நன்கொடை மூலம் 6 விவசாயிகளுக்கு நிதியை பகிர்ந்து அளிக்க முடிவு செய்தோம்.

முதல் கட்டமாக, நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டத்தில் உள்ள 3 கிராமங்களை சார்ந்த 3 விவசாயிகளின் குடும்பத்திற்கு நம்மால் ஆன நிதியுதவி செய்தோம். இதன் மூலம் அவர்களின் கடன் பிரச்சனையை தீர்க்க உதவியாய் இருந்தது என அவர்கள் கூறினர்.

1. கல்யாணசுந்தரம் குடும்பம் – ரூ.1 லட்சம்,

2. தனுசம்மாள் குடும்பம் – ரூ.20,000,

3. நவநீதம் குடும்பம் – ரூ.30,

2 வாரங்களுக்கு முன்பு நாம் எடுத்த சர்வேயும் இதனுடன் இணைத்து உள்ளோம். இதை சிறப்பாக முன்னெடுத்த செய்த திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். விவசாயிகளின் வாழ்க்கையை காக்க, நிதி அளித்த முகம் தெரியாத அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Save Farmers என்ற அமைப்பின் மூலம் நமக்கு கிடைத்த கீழ்க்கண்ட உறுதி செய்யப்பட்ட தகவலுக்கு, நமது நண்பர்கள் விவசாயிகளுக்கு அளித்த நன்கொடையில் இருந்து ரூ. 25000 அவர்களின் கடனை அடைக்கவும், வாழ்வாதாரத்தை முன்னேற்ற ரூ. 6000 தையல் இயந்திரம் வாங்கவும் உதவி செய்தோம்.

'நலிவடைந்த விவசாயிகளை காப்பாற்றி கைகொடுக்கும் எங்கள் முயற்சியில் நாங்கள் அடையாளம் கண்ட ஒரு ஏழை விவசாய குடும்பத்தின் துயர் துடைக்க உதவுங்கள்.

குத்தகைக்கு நிலம் எடுத்து குண்டுமணி நெல் விதைத்து தண்ணீர் கேட்ட பயிர்களுக்கு கண்ணீரை காணிக்கையாக்கி கழனியிலே மாண்டு போனார் திருவாருர் மாவட்டம் பத்தூரை சேர்ந்த விவசாயி நவசீலன்

திரு நவசீலன் அவர்களுக்கு, மனைவி மற்றும் 9 வயது மகன் உள்ளார், உதவி செய்யும் பொருட்டு நாங்கள் அவரின் குடும்பத்தினரை அணுகிய போது அவரின் மனைவி தையல் பயிற்சி மற்றும் தையல் சாதனம் தந்து உதவுமாறு கேட்டுள்ளார்.

நல்ல உள்ளங்கள் தங்களால் செய்ய முடிந்ததை இந்த குடும்பத்தினருக்கு செய்யவும்.

ராஜேஷ் , Save farmers...'

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு, மூன்றாம் கட்டமாக ஈரோடு மாவட்டத்தை சார்ந்த விவசாய குடும்பத்தின் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கும், மஞ்சள் மண்டி கடனையும் அடைக்க நிதியுதவி நேற்று அளிக்கப்பட்டது.

முத்துசாமி குடும்பத்திற்கு ரூ. 35000 மும், ராமலிங்கம் குடும்பத்திற்கு ரூ. 15000 மும் அளிக்கப்பட்டது. இந்த இரு குடும்பங்களை நேரில் சந்தித்து சர்வே எடுத்து முன்னின்று செயல்பட்ட கரூர் நண்பர்களான ஆனந்த், கோபிநாத், விஜயானந்த் ஆகியோருக்கு மணமார்ந்த நன்றிகள்.

விவசாயிகளின் துயர் துடைக்க உதவியாய் இருந்து நன்கொடை வழங்கிய முகம் தெரியாத அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

நமக்கு கிடைத்த 2.3 லட்சம் விவசாயிகளுக்கான நிதியுதவி முழுவதும் அவர்களின் பொருளாதார சூழ்நிலை பொறுத்து பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

நாகை (செயல்வீரர்கள் - கோபாலகிருஷ்ணன் & நண்பர்கள்)

1. கல்யாணசுந்தரம் - ரூ. 100000

2. நவநீதம் - ரூ. 30000

3. தனுசம்மாள் - ரூ. 20000

திருவாரூர் (செயல்வீரர்கள் - ராஜேஷ் & save farmers அமைப்பு நண்பர்கள்)

4. நவசீலன் - ரூ. 31000

ஈரோடு ( செயல்வீரர்கள் - ஆனந்த் & நண்பர்கள்)

5. முத்துசாமி - ரூ. 35000

6. ராமலிங்கம் - ரூ. 15000

imag

imag

imag

imag

imag

imag

imag

imag