செய்பவை

கல்வி

நாங்கள்

இளையதலைமுறை

கல்வி

1.விருத்தாச்சலம் மாணவி ஜீவா, நவம்பர் 2016

இளையதலைமுறை* குழுவில் ஒரு ஏழை பெண்ணின் படிப்பு செலவிற்கு உதவி தேவை என்று தக்க ஆதாரங்களோடு தஞ்சை கார்த்திக் அவர்கள் மூலம் பகிர பட்டது. உண்மை நிலையை உறுதி செய்ய *கடலூர் இளையதலைமுறை* வாட்ஸ்அப் குழுவில் விருத்தாச்சலம் அருகில் உள்ள நண்பர்களின் உதவி கோரப்பட்டது. ஸ்ரீராம் அவர்களின் நண்பர் தர்மா, இன்று(19/11/2016) அவர்கள் வீட்டில் நேரில் சென்று விசாரித்தார்.

ஜீவா என்ற பெண்ணின் தந்தை இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது தாய் கூலி வேலை செய்து குடும்பத்தை பார்த்து கொள்கிறார். தங்கை பதினோராம் வகுப்பு படிக்கிறார்.

படிப்பு செலவிற்கு வருடத்திற்கு ரூ. 35000 தேவை படுகிறது. கரூர் வழக்கறிஞர் ஒருவர் ரூ.10,000 நன்கொடையாகவும், அவரது தாய் கடன் வாங்கி ரூ. 10,000 மும் கட்டி உள்ளனர். மீதி ரூ. 15,000 உதவி தேவைபடுகிறது. நமது நண்பர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

சில தினங்களிலே தேவையான பணம் கிடைத்துவிட்டது.

imag

imag

2.சேலம் மாணவர் ஞானப் பிரகாஷ், டிசம்பர் 2016

சேலம் விநாயக மிஷன் கல்லூரியில் படிக்கும் ஏழை குடும்பத்தை சார்ந்த மாணவர் *ஞானபிரகாஷ்* அவர்கள் கல்வி கட்டணம் கட்ட சிரமப்பட்ட நிலையில், மாணவரின் படிப்பு செலவிற்காக *இளையதலைமுறை* நண்பர்கள் மூலம் ரூ. 50,000-மும், *friends2care* அமைப்பின் மூலம் ரூ. 25,000-மும் நிதி வரைவோலையாக இன்று (03/12/2016) நேரில் சந்தித்து அளிக்கபட்டது.. இணைக்கப்பட்டுள்ள புகைபடத்தை காணவும்.

நேரில் சந்தித்து வரைவோலையை கொடுக்க உறுதுணையாக இருந்த சேலம் இளையதலைமுறை குழுவில் உள்ள நண்பர் *கோபாலகிருஷ்ணன்* மற்றும் அவரது நண்பர் *கெளதம் ராஜா* அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..

இதை சிறப்பாக செய்து முடிக்க உறுதுணையாக அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..

imag

3.மதுரை மாணவர் பிரவீன், பிப்ரவரி 2017

மதுரை மாவட்டம் சமயநல்லூரை சேர்ந்தவர் பிரவின் குமார். மதுரையில் உள்ள நாகசிவா தொழில்நுட்ப கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் தற்போது ஐந்தாவது மற்றும் ஆறாவது செமஸ்டர் கட்டணம் கட்ட ரூ.40,000 தேவைபடுகிறது. கட்டணம் செலுத்த முடியாமல் தவித்துகொண்டு உள்ளார். தயவு செய்து நண்பர்கள் உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அவரை பற்றிய தகவல்களை இணைத்துள்ளோம்.

சமயநல்லூர் இளையதலைமுறை வாட்ஸ்அப் குழுவில் உள்ள நண்பர் ஒருவர் ரூ. 25000 உடனடியாக கொடுத்து உதவினார். மீதம் ரூ. 15000 தேவைப்படுகிறது. உதவி செய்ய நண்பர்களிடம் கோரிக்கை வைத்தோம்.

சில தினங்களில் பணம் கிடைத்தது. ஏழை மாணவர் பிரவீன்குமார் அவர்களிடம் கல்வி கட்டண உதவி ரூ. 36,000 அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் பிரவீன்குமார் அவர்களின் கல்வி கட்டணம் கட்ட உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

1/02/17, Karthikeyan Kamatchi, Saudi Arabia(Madurai), Samayanallur Group, 25000

21/02/17, Jagadeesh I, Tirunelveli, 300

21/02/17, Sasi kumar, Chennai, 2000

21/02/17, Edison Perinbaraj, Chennai, 100

22/02/17, A.K.Saravana Kumar, Erode, 100

22/02/17, Govindaraj, Chennai, 200

22/02/17, M.Kalyani sundaram, Tirunelveli, 200

22/02/17, D Ramanathan & R.Sundareswari, Chennai, 1000

22/02/17, Manoj T, Chennai, 200

23/02/17, Ponnuvel A, Dharmapuri, 1000

23/02/17, Hariharan Gopakumar, USA, 5000

23/02/17, Raja Sivasamy, Chennai, 200

23/02/17, Name not known, Chennai, 500

23/02/17, Murugan S, Tiruvannamalai, 200

Total = Rs. 36,000

imag

4.சேலம் மாணவர் அஜித், பிப்ரவரி 2017

சேலம் நண்பர் மாருதி அவர்கள் மூலம் ஒரு ஏழை மாணவனுக்கு உதவி தேவைப்படுகிறது என்ற செய்தி கிடைத்தது. அதை பற்றிய முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஹாஸ்டல் கட்டணம் ரூ.48,000 கட்ட வேண்டும்.

Dear ilaiyathalaimurai Team,

Greetings!

I recently came to know a student who is seeking help to pay his hostel fees. His name is Ajith Kumar and he is a state topper in 10th and also scored 1170 in his +2. He is studying second year medical in Thanjavur medical college and he got the seat through state counselling in merit. Regular fees is paid by scholarship and now trying very hard to get help for his monthly hostel fees and exam fees. He also contacted Agaram foundation and his request was rejected by them because he had not requested aid from first year.

I have all of his documents. I can send you the same. Can we seek help from the team?

I have the attached the documents of Ajith Kumar. If you need any further proof, I can ask him to send it to you directly. Kindly let me know.

Best regards

Maruthi

-------------------------------------------------------------------

I am Ajithkumar.C, studying 2nd year MBBS at Thanjavur medical college. I started my 1st year MBBS with enough financial status and my father paid the 1st year fees including college and the hostel fees. Later my family financial condition worsened when my father became addictive to alcohol and borrowed money in all his circles and now stopped supporting the family. This left me in a difficult situation and now I am in a position to take care of studies by myself. My mother is a coolie worker and could not support me much. The financial situation of my family worsened and I can't pay my 2nd year fees. So, I kindly request you to look into my problem and please help me.

-------------------------------------------------------------------

நன்றாக படிக்கும் இந்த மாணவருக்கு நம்மால் முடிந்த உதவி செய்ய விரும்புபவர்கள், கீழ்கண்ட நமது வங்கி கணக்கில் நன்கொடை அளிக்கலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. சில தினங்களில் நண்பர்களின் உதவியுடன் தேவையான பணம் கிடைத்தது.

ஏழை மாணவர் அஜித் அவர்களின் ஹாஸ்டல் கட்டணம் ரூ. 48000 கட்ட உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

புகைப்படம் 1: சேலம் வாட்ஸ்அப் குழுவில் செயல்வீரராக உள்ள ஷேக் இம்ரான் இஸ்மாயில் அவர்கள், நாம் அனுப்பிய வரைவோலையை இன்று நேரில் சந்தித்து அளித்தார்...

புகைப்படம் 2: நிதி அளித்த முகம் தெரியாத நல்ல உள்ளங்கள்...

புகைப்படம் 3: அஜித் அவர்களின் குடும்ப சூழ்நிலையை மாருதி ரமணன் அவர்கள் நேரில் விசாரித்த போது...

புகைப்படம் 4: நாம் அனுப்பிய வரைவோலை.

imag

imag

imag

5.சென்னை மாணவர் பார்த்திபன், ஏப்ரல் 2017

ஏழை தாயிற்கு இரு பிள்ளைகள். கணவர் குடியால் இறந்து விட்டார். தாய் அங்கன்வாடியில் ரூ. 7500 சம்பளம் பெற்று வீட்டு வாடகை, ரேஷன் அரிசி, மளிகை சாமான், காய்கறி என குடும்பம் நடத்த முடியவில்லை. அவரது முதல் மகன் பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வருகின்றார். முதல் செமஸ்டர் தெரிந்தவர்கள் உதவி செய்து கட்டணம் கட்டி உள்ளார். தற்போது இரண்டாவது செமஸ்டர் கட்டணம் கட்ட பணம் இல்லை. ரூ. 21000 செமஸ்டர் கட்டணம் கட்டவில்லை என்றால், செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என கல்லூரி நிர்வாகம் கூறி விட்டது.

இது போன்று கண் முன்னே பல சோக நிகழ்வுகள் தினந்தோறும் வந்து கொண்டுள்ளது. ஏற்கனவே பல மாணவர்கள் கல்வி கடன் பெற்று திரும்ப செலுத்தாமையால், பல வங்கியிலும் புதிதாக கல்வி கடன் கொடுக்க முன் வருவதில்லை.

ஏழை மாணவர்கள் கல்லூரிப் படிப்பை தொடர என்ன வழி? அரசு பொறியியல் கல்லூரிகள் மிக மிக குறைவு.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை கூட கட்ட இயலாமல் பல மாணவர்கள் உள்ளனர். கல்விக்கடனும் கிடைப்பதில்லை. இவர்களை போன்ற ஏழை மாணவர்களுக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்க முன் வரலாமே. இன்று இந்த மாணவருக்கு இரண்டாவது செமஸ்டர் கட்டணம் கட்ட ரூ. 21000 நிதியுதவி இளையதலைமுறை மூலம் அளிக்கப்பட்டது. தன்னுடைய பெயரை குறிப்பிட வேண்டாம் என கூறி முழு நிதியையும் ஒருவரே அளித்து உள்ளார்.காணொளி பார்க்க
imag

6.மாணவி அர்ச்சனா, ஜூன் 2017

அர்ச்சனா என்ற ஏழை பெண்ணின் B.Com., படிப்பு செலவிற்கு இளையதலைமுறை சார்பாக ரூ. 11,000 மும், dreams of kalam அமைப்பின் மூலம் ரூ. 5000 மும் அளிக்கப்பட்டது. நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

imag

7.மன்னார்குடி மாணவர் ஆண்டனி, ஜனவரி 2018

மன்னார்குடியில் ஒரு மாணவனின் மேற்படிப்புக்கு நிதி உதவி தேவைப்படுகிறது.. சலவைத் தொழிலாளியின் மகன். 1060 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கும்பகோணத்தில் ஒரு தனியார் கல்லூரியில் படிக்க விரும்புகிறார்.

வருடம் 25000 செலவாகிறது. திருவாரூர் இளையதலைமுறை நிர்வாகி மூலம் நேரில் பார்த்து உறுதி செய்யப்பட்டது. நிதி அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட நம் அமைப்பின் வங்கி கணக்கில் நிதியை செலுத்தலாம் என்று கோரிக்கை வைத்தோம்.

Name: P.Anthony rabin

Father's name :S.Paulraj

Address :

614,gandhi nagar, moovanallur Road, Mannargudi

college name : Annai group of Arts College kovilacherry kumbakonam.

Sem fees: 6,500 (2 sem per year=13000)

Bus fees:6,000(for 6 months)

மன்னார்குடி சலவை தொழிலாளி மகன் +2 வில் 1060 மதிப்பெண் பெற்ற மாணவரின் படிப்பிற்கு இளையதலைமுறை சார்பாக செமஸ்டர் கட்டணம் ரூ. 13000 வரைவோலை எடுத்து அனுப்பி விட்டோம்.

+2 வில் 1131 மதிப்பெண் மற்றொரு ஏழை மாணவர் பரணிதரன் அவர்களுக்கு செமஸ்டர் கட்டணம் கட்ட இளையதலைமுறை சார்பாக ரூ. 30000 வரைவோலை எடுத்து அனுப்பி உள்ளோம்.

ஏழை மாணவர்களின் கல்விக்கு நிதி அளித்து உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

imag

imag