நிகழ்வுகள்

களப்பணிகள்

நாங்கள்

இளையதலைமுறை

நவம்பர் -222014-16

களப்பணிகள்

ஒவ்வொரு ஆண்டும் இளையதலைமுறையின் களப்பணிகளின் பட்டியல் தேதி வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 22, 2014 முதல் ஜூலை 17, 2016 நடைபெற்ற களப்பணிகள் அனைத்தும் கீழ்கண்ட காணொளியில் உள்ளது.

காணொளி பார்க்க

ஜூலை-17

2016-17

ஜூலை 17, 2016 இரண்டாம் சந்திப்பிற்கு பிறகு பிப்ரவரி 26, 2017 வரை நாம் செய்த முக்கிய களப்பணிகள்:

1. சமயநல்லூர் இளையதலைமுறை குழு ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து மரக்கன்றுகள் நடுதல் / பொது இடங்களை சுத்தம் செய்தல் / குப்பை தொட்டிகள் வைத்தல் / அரசு பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2. சென்னை இளையதலைமுறை குழு ஒவ்வொரு வாரமும் மரக்கன்றுகள் நடுதல் / பொது இடங்களில் வர்ண பூச்சு அடித்தல் / பொது இடங்களை சுத்தம் செய்தல் / அரசு பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

3. கோவை இளையதலைமுறை குழு நெடுஞ்சாலையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுதல் / இரத்த தானம் / ஒரு வார்டை தேர்வு செய்து அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

4. கிருஷ்ணகிரி இளையதலைமுறை குழு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடத்தி அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

5. சோளிங்கர் இளையதலைமுறை குழு புதிதாக உருவாகி மரக்கன்றுகள் நட்டு தங்களின் முதல் களப்பணியை துவங்கினர்.

6. திருப்பூர் இளையதலைமுறை சார்பாக பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

7. கரூர் / நாமக்கல் / சேலம் நண்பர்கள் ஒன்று சேர்ந்து 100 நாள் திட்டத்தை பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு துவங்கி வைத்தனர்.

8. தூத்துக்குடி விளாத்திகுளம் இளையதலைமுறை குழுவின் மூலம் இரத்த தானம் போன்றவற்றை செயல்படுத்தி வருகின்றனர்.

9. கடலூர் இளையதலைமுறை சார்பாக அரசு பள்ளிக்கு எழுத்து பொருட்கள் / புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

10. கன்னியாகுமரி இளையதலைமுறை சார்பாக செயல்வீரர்கள் சந்திப்பு மற்றும் பூங்கா சுத்தம் செய்தல் போன்ற களப்பணியை துவங்கினர்.

11. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளையதலைமுறை நண்பர்கள் சுமார் 1000 தமிழகம் முழுவதும் கலந்து கொண்டனர். அதில் குறிப்பாக கோவை மற்றும் ராயக்கோட்டை நண்பர்கள் காவல் துறையின் அனுமதி பெற்று மனித சங்கிலி மற்றும் பேரணிகளை நடத்தினர்.

12. பனைகள் கோடி என்ற திட்டத்திற்கு முழு ஆதரவு அளித்தல்.

13. 19 க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

14. சிறந்த களப்பணியாளர் விருதுகள்.

இளையதலைமுறை சார்பாக நன்கொடை பெறப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

1. வேளச்சேரி விபத்தில் இறந்த குடும்பத்திற்கு நிதியுதவி - 3000.

2. சமயநல்லூர் அரசு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளுக்கு நிதியுதவி - 5000.

3. விருதாச்சலத்தை சார்ந்த ஏழை பெண் ஜீவா அவர்களின் கல்வி கட்டணம் கட்ட நிதியுதவி Diploma in Dialysis Technician - 12750.

4. கடலூர் குறிஞ்சிப்பாடியை சார்ந்த ஞானப்பிரகாஷ் அவர்களின் கல்வி கட்டணம் கட்ட நிதியுதவி B. Pham. - 50000.

5.SIP ஆதரவற்றோர் அமைப்பிற்கு வரதா புயலில் சேதமடைந்த தண்ணீர் தொட்டி புதிதாக வாங்கி கொடுத்தது - 6000.

6. இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு பேரணிக்கு நிதியுதவி - 8000.

7. இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி - 2.33 லட்சம்.

8. சேலம் மாவட்டத்தை சார்ந்த அஜித் குமார் அவர்களுக்கு நிதியுதவி MBBS. - 48000.

9. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த ஷாலினி அவர்களின் மருத்தவ செலவிற்கு 9200.

10. மதுரை மாவட்டத்தை சார்ந்த பிரவீன்குமார் அவர்களின் நிதியுதவி Dip. Mech. Eng - 36000.

11. மரக்கன்றுகளை பாதுக்காக்க வேலி அமைக்க நிதி கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு வேளாண் அறிஞர்கள் மூலம் உதவி செய்ய Rice Bucket Challenge என்ற திட்டம் பெரிதாக வெற்றி அடையவில்லை..

12. கடந்த 6 மாதத்தில் சுமார் 4.10 லட்சம் அளவிலான நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி-262017

பிப்ரவரி 26, 2017 முதல் ஆகஸ்ட் 20, 2017 வரை செய்த களப்பணிகள்

28/02/2017 - சோளிங்கர் இளையதலைமுறை சார்பாக மரம் நடுதல்

05/03/2017 - பல்வேறு அமைப்புகள் ஒன்று சேர்ந்து 'நமது வாடும் நமது வீடே'நிகழ்வு துவங்கப்பட்டது. தொடர்ந்து பல வாரங்கள் களப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

05/03/2017 - மெக்கானிக் ஷாப் அமைக்க வேளச்சேரி மின்சார விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ. 40000 நிதியுதவி வசூல் செய்யப்பட்டது. மெக்கானிக் ஷாப் இடம் கிடைக்காததால் நிதி இன்னும் கொடுக்கவில்லை.


05/03/2017 & 11/03/2017 - திருவாரூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட 6 விவசாயிகளுக்கு சுமார் 2.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

13/03/2017 - ஆர்.கே நகரில் போட்டியிட வேட்பாளர் ஆராயப்பட்டு திருமதி. புவனேஸ்வரிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

18/03/2017 - திரு. பன்னீர் செல்வம் அவர்கள் மூலம் தலைமை திறன் பயிற்சி சுமார் 40 பேருக்கு அளிக்கப்பட்டது.

26/03/2017 - காகிதபுரம் பகுதியில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

26/03/2017 to 09/04/2017 - நாம் ஆதரவு அளித்த ஆர்.கே நகர் வேட்பாளருக்காக தேர்தல் பிரச்சாரம் துவங்கப்பட்டு சுமார் 44 பேர் கலந்து கொண்டனர். ரூ. 14500 நிதியுதவி செய்தனர்.

09/04/2017 - பனைகள் கோடியின் முதல் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து திருச்சி, விருதுநகர் என நடைபெற்றது.

16/04/2017 - நாமக்கல் & கரூர் இளையதலைமுறை ஒன்று சேர்ந்து அரசு பள்ளி மாணவர்களின் திறனறியும் போட்டிகள் நடத்தி பரிசுகள் அளித்தனர்.

23/04/2017 - சென்னையில் சுமார் 25 பேர் கலந்து கொண்டு RTI பற்றியும் RTE பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

28/04/2017 to 31/05/2017 - RTE பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சுமார் 150 குழந்தைகளுக்கு தனியார் பள்ளியில் இலவசமாக படிக்க விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டது. இதில் சுமார் 20 தன்னார்வலர்கள் உதவி செய்தனர்.

30/04/2017 – சமயநல்லூர் இளையதலைமுறை சார்பாக இயற்கை வழி உணவு பற்றிய விழிப்புணர்வு, மரம் நடுதல் போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

30/04/2017 - angels of marina அமைப்போடு இணைந்து மெரினா கடற்கரை சுத்தம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது.

01/05/2017 & 15/08/2017 - இரு நாட்களிலும் கிராம சபா கூட்டத்தில் பல நண்பர்கள் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

07/05/2017 - சோளிங்கர் இளையதலைமுறை மூலம் கோவில் திருவிழாவில் வந்த மக்களிடம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது. வெய்யிலின் தாக்கத்தை தணிக்க அனைவருக்கும் இலவசமாக மோர் அளிக்கப்பட்டது.

14/05/2017 to 09/07/2017 - கோவிலம்பாக்கம் பகுதியில் உள்ள குளத்தை தேர்வு செய்து வெல்க பாரதம் அமைப்போடு இணைந்து சுமார் 10 வாரங்களுக்கு மேல் சுத்தம் செய்து, மரக்கன்றுகள் நட்டு பாதுகாத்தோம். எதிரே உள்ள அரசு பள்ளியிலும் மரக்கன்றுகள் நட்டு பாதுகாத்தோம். இந்த காணொளிகளை சுமார் 3 லட்சம் பேர் இணையத்தில் கண்டனர்.

27/05/2017 & 25/06/2017 - மரபணு மாற்று கடுகை எதிர்த்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நண்பர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து தாம்பரத்தில் நடைபெற்ற கருத்தரங்கிலும் கலந்து கொண்டோம்.

15/06/2017 - கோவை இளையதலைமுறை சார்பாக இரத்த கொடையாளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

18/06/2017 - மேலூர் இளையதலைமுறை சார்பாக கண்மாய்யை சுத்தம் செய்யும் முதல் களப்பணியை மேற்கொண்டனர்.

25/06/2017 - அள்ளியூர் இளையதலைமுறை சார்பாக சீமை கருவேல மரங்களை அழித்தல். மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்தல். மாதிரி கிராம சபை கூட்டம் நடத்துதல் என பல நிகழ்வுகளை முன்னெடுத்தனர்.

02/07/2017 - கடவு சீட்டில் இந்தியை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். சுமார் 33 பேர் கலந்து கொண்டு ஆதரவு அளித்தனர்.

06/07/2017 & 15/07/2017 - பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்கள் முன்னெடுத்த நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோம். அதனை தொடர்ந்து, ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தேர்வு கருத்தரங்கிலும் கலந்து கொண்டோம்.

16/07/2017, 23/07/2017 - சிவகாசி முகநூல் நண்பர்கள் முன்னெடுத்த பேருந்து நிறுத்தம் சுத்தம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் களப்பணி.

16/07/2017 - சோளிங்கர் இளையதலைமுறை சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு இலவச விளையாட்டு உபகரணங்கள் அளிக்கப்பட்டன.

22/07/2017 - ராஜபாளையம் ராம் அவர்கள் கோவிலம்பாக்கம் மட்டுமல்லாமல் அரசு பள்ளி, கடற்கரை, மரம் நடுதல் என பல்வேறு களப்பணிகளில் அவராகவே கலந்து கொண்டு அவரது தெருவில் உள்ளவர்களை ஒன்று சேர்த்து ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி களப்பணிகள் மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

28/07/2017 - குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சமூக போராளிகளை விடுவிக்க கோரி மே 17 இயக்கம் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டோம்.

30/07/2017 - மேலூர் இளையதலைமுறை சார்பாக பேருந்து நிறுத்தம் சுத்தம் செய்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்த காணொளியை சுமார் 1 லட்சம் பேர் இணையத்தில் கண்டனர்.

04/08/2017 - சிட்லபாக்கம் ரைசிங் குழுவினர் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்தனர்.

06/08/2017 - பனைகள் கோடியின் முதல் விதை பெருங்குளத்தூர் ஏரியில் விதைக்கப்பட்டது.

06/08/2017 - சாலை போக்குவரத்து விழிப்புணர்வு தோழன் அமைப்போடு இணைந்து சுமார் 72 பூங்காக்களில் ஏற்பாடு செய்யப்பட்டது.

12/08/2017 - சோளிங்கர் இளையதலைமுறை சார்பாக நெகிழி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சுமார் 500 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆகஸ்டு - 20 2017

ஆகஸ்ட் 20, 2017 முதல் டிசம்பர் 31, 2017 வரை நடைபெற்ற களப்பணிகள்

26/08/2017 - பச்சை தமிழகம் சார்பில் நடைபெற்ற உள்ளாட்சி பற்றிய விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டோம்.

02/09/2017 - சிவகாசி, சென்னை, கோவை என 3 பகுதிகளில் மாணவி அனிதா இறப்பிற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினோம்.

10/09/2017 - சென்னையில் வள்ளுவர் கோட்டம், அம்பத்தூர், பல்லாவரம், சோழிங்கநல்லூர் என 4 பகுதிகளில் சுமார் 100 பேர் கலந்து கொண்டு நீட் விலக்கு கோரி போராட்டம் நடத்தினோம்.

17/09/2017 - சென்னையில் ஸ்பென்சர் பிளாசா அருகில் சுமார் 40 பேர் கலந்து கொண்டு நீட் விலக்கு கோரி போராட்டம் நடத்தினோம்.

23/09/2017 - மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறையில் இருந்து வந்தவுடன் நடத்திய கூட்டத்தில் பெருவாரியாக கலந்து கொண்டு ஆதரவு அளித்தோம்.

25/09/2017 - அம்பத்தூர் பகுதியில் 12 பேர் கலந்து கொண்டு அடுத்த கட்ட நிகழ்வுகளை பற்றி விவாதம் நடத்தினோம்.

01/10/2017 - தமிழகம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டோம்.

10/10/2017 - இளந்தமிழர் முன்னணி கழகம் சார்பில் நடைபெற்ற நீட் விலக்கு கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டோம்.

14/10/2017 - உள்ளாட்சி பற்றி விழிப்புணர்வு நிகழ்வில் பல உள்ளாட்சி பற்றிய கேள்விகளுக்கு தி இந்து பத்திரிக்கை சஞ்சீவி குமார் அவர்கள் மூலம் பதில் அளிக்கப்பட்டது.

14/10/2017 - கரூர் இளையதலைமுறை சார்பில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

15/10/2017 - கடவுள், மதம், பெரியார் பற்றிய விவாதம் காந்தி மண்டபத்தில் நடைபெற்றது.

29/10/2017 - ஜி.எஸ்.டி விலக்கு கோரி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.

30/10/2017 - கும்பகோணம் நண்பர்கள் ஒன்று சேர்ந்து பொது இடத்தை சுத்தம் செய்து மரக்கன்றுகளை நட்டனர்.

31/10/2017 - கோவிலம்பாக்கம் நண்பர்கள் ஒன்று சேர்ந்து சிறு மழைக்கு ஏற்படும் வெள்ளத்தை தொடருக்கு கோரி போராட்டம் ஒன்றை நடத்தினர்.

04/11/2017 - களம் - நதிநீர் இணைப்பு தேவையா என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

05/11/2017 - பஞ்சப்பட்டி ஏரி தூருவாரும் பணி துவங்கப்பட்டது.

02/12/2017 - திரு. பன்னீர் செல்வம் அவர்கள் மூலம் தலைமை திறன் பயிற்சியில் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

03/12/2017 - பஞ்சப்பட்டி ஏரி தூருவாரும் பணி நடைபெற்றது.

12/12/2017 - ஒக்கி புயலில் சிக்க மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கூறி இளந்தமிழர் முன்னணி கழகம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு அளித்தோம்.

17/12/2017 - திக்குகள் எட்டும் அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்வில் இளையதலைமுறை அமைப்பை பற்றி சுருக்கமாக விளக்க உரை அளித்தோம்.

23/12/2017 - நையப்புடை விவாத நிகழ்வில் தாய்மொழி வழி கல்வி சிறந்ததா அல்லது ஆங்கில வழி கல்வி சிறந்ததா என்ற தலைப்பில் இளையதலைமுறை சார்பில் பேச்சாளராக கலந்து கொண்டோம்.

31/12/2017 - உள்ளாட்சி, கிராமசபை பற்றி விழிப்புணர்வு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

ஜனவரி-012018

ஜனவரி 01, 2018 முதல் மார்ச் 18, 2018 வரை நடைபெற்ற களப்பணிகள்

06/01/2018 - சிட்லப்பாக்கம் ரைசிங் குழுவினர் முன்னெடுத்த RTI, RTE, நீர் மேலாண்மை நிகழ்வில் இளையதலைமுறை பற்றி சுருக்கமாக எடுத்து கூறினோம்.

07/01/2018 - சமயநல்லூர் இளையதலைமுறை குழுவினர் பல வாரங்களாக வீடுவீடாக சென்று பாரம்பரிய உணவு முறைகளை பற்றிய விழிப்புணர்வு

26/01/2018 - 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நண்பர்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

26/01/2018 - நாமக்கல், கரூர், சேலம் இளையதலைமுறை அணி 4 சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு திறனறியும் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது.

26/01/2018 - RTI பற்றிய விளக்க உரை ராம் அவர்கள் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

28/01/2018 - கரூர் பஞ்சப்பட்டி ஏரியை தூர்வாரும் பணியை பல வாரங்களாக செய்து வருகின்றனர். சபரி கிரீன் அமைப்பு மற்றும் புதிய தலைமுறை நம்மால் முடியும் குழுவும் ஆதரவாக கலந்து கொண்டனர்.

28/01/2018 - பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம்.

29/01/2018 - பேருந்து கட்டண உயர்வை குறைக்க கோரி போக்குவரத்து துறை அமைச்சரிடம் மனு.

03/02/2018 - பெற்றோர்கள் சங்கம் சார்பில் தனியார் பள்ளி கட்டண கொள்ளையை கண்டித்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் போராட்டம்.

03/02/2018 - மே 17 இயக்கம் சார்பாக பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம்.

04/02/2018 - இளந்தமிழர் முன்னணி கழகம் சார்பாக பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சோழிங்கநல்லூரில் போராட்டம்.

19/02/2018 - இளந்தமிழர் முன்னணி கழகம் சார்பாக நீட் விலக்கு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

19/02/2018 - நாமக்கல் இளையதலைமுறை சார்பாக நீட் விலக்கு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

25/02/2018 - தமிழக மக்கள் கழகம் சார்பாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

26/02/2018 - நாமக்கல், கரூர், சேலம் இளையதலைமுறை அணி 4 சார்பாக நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

27/02/2018 - பல்வேறு அமைப்புகள் ஒன்று கூடி, சிரியாவில் போரை நிறுத்த கோரி ரஷ்ய தூதரகத்தில் மனு.

28/02/2018 - பல்வேறு அமைப்புகள் ஒன்று கூடி, சிரியாவில் போரை நிறுத்த கோரி அமெரிக்க தூதரகத்தில் மனு.

03/03/2018 - ஜாதி ஒழிப்பு, ஜாதி வாரி இட ஒதுக்கீடு, ஜாதி மறுப்பு திருமணம், ஆணவ கொலை போன்ற தலைப்புகளில் விவாதம்.

04/03/2018 - தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு முன்னெடுத்த 'சிரியாவில் போரை நிறுத்த கோரி ஒன்று கூடல்' நிகழ்வில் கலந்து கொண்டு முழு ஆதரவை அளித்தோம்.

10/03/2018 - மாற்று அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும் என 6 அமைப்புகள்/கட்சிகள் சார்பில் பொதுவான விவாதம் முன்னெடுக்கப்பட்டது.