எங்களை பற்றி

கொள்கைகள்

நாங்கள்

இளையதலைமுறை

கொள்கைகள்

1. லஞ்சம் மற்றும் ஊழலே ஒழிக்கப்பட வேண்டிய முதல் நோய்.

2. படிப்படியான பூரண மது விலக்கை அடைய வேண்டும். மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக் கேடு. மதுப் பழக்கம் உள்ளவனுக்கு சமூகப் பணி செய்யும் தகுதியில்லை என்பது இளையதலைமுறையின் நம்பிக்கை.

3. சாதி ஒழிக்கப்பட வேண்டும்.

4.சாதிகள் ஒழியும் வரை, தற்போதுள்ள சமூக நீதி (இட ஒதுக்கீடு) தொடர வேண்டும்.

5. சாதி / மதம் / இனம் மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும்.

6. தாய் மொழி வழிக் கல்வியே சிறந்த கல்வி. இருப்பினும் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு உள்ளிட்ட எந்தவொரு மொழியையும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் எந்தவொரு மொழியையும் திணித்தல் தவறு.

7. தனித் தமிழ்நாடு கொள்கைக்கு நமது ஆதரவு இல்லை. மாநில சுய ஆட்சியுடன் கூடிய ஒருங்கிணைந்த இந்திய நாடே நமது இலக்கு.

8. மாற்று மொழி பேசினாலும் / பேசாவிட்டாலும் இவர் இவர் தான் தமிழர் என்ற வரையறையை ஏற்கவில்லை.

9. கூடங்குளம், நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற சுற்றுச் சூழலை அச்சுறுத்தும் திட்டங்கள் கைவிடப்பட வேண்டியவை.

10. பெரியாரையும், திராவிட கொள்கைகளையும் எதிர்க்கவில்லை. அதே நேரம் கடவுள் மறுப்புக் கொள்கையை ஆதரிக்கவில்லை. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்.

11. தனி ஈழம் அமைய முழு ஆதரவு உண்டு.

12. மீனவர் சுட்டு கொள்வதை ஒரு கொடூரமான செயல். அதை தடுப்பது அரசின் கடமை. கச்சத்தீவு தமிழகத்தின் சொத்து. அது மீட்கப்பட வேண்டும்.

13. ஜல்லிக்கட்டுக்கு, ரேக்ளா, சாவல் சண்டை உள்ளிட்ட பாரப்பரியக் கலைகளுக்கு முழு ஆதரவு உண்டு.

14. காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட நதிகளில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது.

15. வளங்களை பாதிக்காத அந்நிய முதலீட்டை ஆதரிக்கிறோம்.

16. நதிநீர் இணைப்பை ஆதரிக்கவில்லை.

17. படிப்படியாக செயற்கை இரசாயனங்களை விட்டொழித்து மீண்டும்நமது பாரம்பரிய முறையான இயற்கை வேளாண்மைக்கு திரும்ப வேண்டும். இதில் அய்யா நம்மாழ்வாரின் கொள்கைகள்/வழிகாட்டுதல்களை முழுமையாக ஏற்கிறோம்.

18. ஓட்டுக்கு பணம் கொடுப்பது அயோக்கியத்தனம். பணம் வாங்கிக் கொண்டு ஒட்டு போடுவது தேச துரோகம்.

19. தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வரும் பட்சத்தில் அதை ஆதரிக்கிறோம்.

20. சதவிகித அடிப்படையில் விகிதாச்சார தேர்தல் நடைமுறைக்கு முழு ஆதரவு உண்டு.

21. கிரானைட் / தாது மணல் கொள்ளை கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட்டு நமது இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

22. இந்துத்துவா உள்ளிட்ட எந்த மதவாத சக்திக்கும் ஆதரவு இல்லை.

23. அனைவருக்கும் இலவச மற்றும் தரமான கல்வி & மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

24. ஜாதி/மதம் பார்த்து வேட்பாளரை தேர்வு செய்தல் தவறான செயல்.

25. தனி ஒருவரை முன்னிறுத்தி அரசியல் செய்தல் கூடாது. கொள்கை அடிப்படையில் தான் அரசியல் செய்ய வேண்டும்.

26. மக்களுக்கு இடையூறான ரயில் மறியல் / சாலை மறியல் கூடாது. போராட்டத்தின் வீரியத்தை பொறுத்து இந்த நிலைப்பாடு மாறலாம்.

27. பேனர் / போஸ்டர் கலாச்சாரம் அறவே கூடாது.

28. நீட், ஜி.எஸ்.டி, மரபணு மாற்று கடுகு போன்றவற்றை எதிர்க்கிறோம்.

29. இல்லுமினாட்டி என்ற விஷயத்தை நம்பவில்லை. இருப்பினும் பன்னாட்டு பெரும் வியாபார சக்திகளுக்கு அடிமையாகி நமது பாரம்பரிய உணவு மற்றும் வாழ்க்கை முறையை இழந்து வருகிறோம் என்பது உண்மை. அதைத் தடுக்க சாமானிய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

30. நடிகர் நடிகைகள் உட்பட எவரும் அரசியலில் ஈடுபடுவதை எதிர்க்கவில்லை. இருப்பினும் போல் தனியொருவரின் முகத்தைக் கவர்ச்சிப் பொருளாகப் பயன்படுத்தும் அரசியல் தவிர்க்கப்பட வேண்டும். தூய அரசியல் என்பது கொள்கையை முன்னிறுத்துவதாக இருத்தல் வேண்டும்.